Script 1
[இந்த ரெக்கார்டிங் IVR இல் பயன்படுத்தப்படும். எனவே இது மிகவும் கவரும் விதமாக இருக்க வேண்டும்] வணக்கம்! எங்கள் நிறுவனத்தை அழைத்தமைக்கு நன்றி! உங்களது புராஜெக்ட்டிற்கு ஒவ்வொரு மொழியிலும் மிகச் சிறப்பான வாய்ஸ்ஓவரைப் பெறுவதற்கான சிறந்த வழி! எங்கள் நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய, எண் ஒன்றை அழுத்தவும். நீங்கள் ஒரு புராஜெக்ட்டை சமர்ப்பிக்க விரும்பினால் அல்லது எங்கள் விற்பனைக் குழுவிடம் பேச விரும்பினால், எண் இரண்டை அழுத்தவும். உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கும் தயாரிப்பு மேலாண்மைக் குழுவின் உதவி தேவையா? எந்தப் பிரச்சினையும் இல்லை! எண் மூன்றை அழுத்தவும். தரத்தைப் பற்றி ஏதேனும் விசாரிக்க வேண்டுமா, எண் நான்கை அழுத்தவும். பகிர்ந்துக் கொள்ள ஏதேனும் யோசனை இருக்கிறதா? பரிந்துரை செய்ய விரும்புகிறீர்களா? நாங்கள் அவற்றைக் கேட்க விரும்புகிறோம்! எண் ஐந்தை அழுத்தவும். [நீங்கள் முணுமுணுப்பது போல இதை மெதுவாகப் படியுங்கள்] ஸ்... ஸ்...! இந்த அணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறீர்களா? [மீண்டும் முந்தைய குரலில்] நாங்கள் வேலைக்கு ஆள் சேர்க்கிறோம்! எங்களின் தற்போதைய வேலை வாய்ப்புகளைப் பற்றி மேலும் அறிய, எங்களுடைய வலைத்தளத்தைப் பார்வையிடவும்!
Script 2 [இந்த ரெக்கார்டிங் எங்களுடைய மார்க்கெட்டிங் விளம்பர வீடியோவிற்கு பயன்படுத்தப்படும். காவியமாகவும், சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் மர்மமாக பேசும் வகையிலும் இருக்க வேண்டும்.] ஒரு காலத்தில் வாய்ஸ்ஓவர் செய்வது கடினமாக இருந்த இந்த உலகில். ஒரு காலத்தில் வாய்ஸ்ஓவர் தொழிலைத் தொடருவது சிரமமாகவும் செலவு நிறைந்ததாகவும் இருந்த இந்த உலகில், நாங்கள் ஒரு புரட்சி செய்ய முடிவு செய்தோம்! அந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை, ஆனால் நாங்கள் முன்பை விட இப்போது வலுவாக இருக்கிறோம். படிப்படியாக முன்னேறி, வாய்ஸ்ஓவர் தொழில்துறையை உங்கள் வீட்டிற்கே கொண்டு வர டிஜிட்டல் சேவையை உருவாக்கியுள்ளோம். இந்தக் குறிக்கோளில் நாங்கள் உங்களையும் இணைத்துள்ளோம், மேலும் இந்தக் கனவில் நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறோம். இதில் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நாங்கள் வந்தோம், இந்த உலகை மாற்றினோம், அதனால் நாங்கள் இங்கே, இந்த இடத்தில் இருக்கிறோம் [இங்கே கொஞ்சம் நிறுத்துங்கள்]. வாய்ஸ்ஓவர் தொழிலை உங்கள் கைக்குள் கொண்டு வருகிறோம்.
Script 3 [இந்த ரெக்கார்டிங் எங்களது தயாரிப்பு வீடியோவில் பயன்படுத்தப்படும். எனவே இது உயிர்ப்புடனும், சுவாரஸ்யமாகவும், சரளமாகவும் ஒலிக்க வேண்டும்] நிபுணத்துவமிக்க வாய்ஸ்ஓவர்களைப் பெறுவதற்கு நாங்கள் ஏன் சிறந்தத் தேர்வாக இருக்கிறோம்? முதல் விஷயம், நாங்கள் எங்கள் தரக் கட்டுப்பாட்டுக் குழுவால் சரிபார்க்கப்பட்ட சிறந்த வாய்ஸ்ஓவர்களை மட்டுமே வழங்குகிறோம். அது தவிர, பல மொழிகளில், நீங்கள் விரும்பும் ஸ்டைல்களில், உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைகளில் சேவைகளை வழங்க எங்களின் வாய்ஸ்ஓவர் கலைஞர்கள் உங்களுக்காக ஆயிரக்கணக்கான விருப்பங்களைக் கொண்டுள்ளனர்! எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களது புராஜெக்ட்கள் அனைத்துக்கும் திருப்திக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, இதன் விளைவாக நீங்கள் எங்களது சேவை குறித்து மகிழ்ச்சி அடையவில்லை என்றால், எங்களது தயாரிப்பு நிர்வாகக் குழு தலையிட்டு, உங்கள் பணத்தை உங்களுக்குத் திருப்பித் தரும். [ஒவ்வொரு வார்த்தையையும் கொஞ்சம் இடைவெளி விட்டு சொல்லுங்கள்] கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை வாடிக்கையாளர் சேவையில் நாங்கள் மிகவும் தீவிரமாக செயல்படுகிறோம்; எங்களது குழு உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகின்றனர். எங்களிடம் நீங்கள் பெறும் அனுபவம் எவ்வித தடையுமின்றி, தொழில் ரீதியாகவும், [இங்கே கொஞ்சம் இடைவெளி விட்டு சொல்லுங்கள்] ஜாலியாகவும் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்! |